Sri Lanka’s cricketing and academic communities recently came together for a unique knowledge-sharing experience as world-renowned statistician and custodian of the Duckworth–Lewis–Stern (DLS) Method, Steven Stern, addressed an engaged audience at a special forum held at the BMICH in Colombo. Organized by Sirus Migration and Education in collaboration with Bond University, the event brought together…
செலான் வங்கி, Browns EV உடன் இணைந்து பிரத்தியேக லீசிங் வசதிகள் ஊடாக பசுமை போக்குவரத்து தீர்வுகளை வழங்குகிறது
இலங்கையின் வாகன இறக்குமதியில் முன்னணியில் திகழும் Brownsஇன் பிரத்தியேக மின்னூர்திப் பிரிவான Browns EV உடன் செலான் வங்கி பிஎல்சி மூலோபாய ரீதியாக கைகோர்த்துள்ளது. இந்த இணைவு ஊடாக செலான் வங்கி, Browns EVயிடமிருந்து மின்னூர்திகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத சௌகரியம், விரைவான ஒப்புதல்கள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நிதித் தீர்வுகளுடனான பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தம், நிலைபேறான பிரயாணத் தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் பசுமை போக்குவரத்து நோக்கி இலங்கை மாறுவதை ஆதரிப்பதிலும் செலான் வங்கியின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. புதிய வசதியின் கீழ், வாடிக்கையாளர்கள் 7 ஆண்டுகள் வரையான திருப்பிச் செலுத்தும் காலத்துடனான லீசிங்கைப் பெறலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் 24 மணி நேரத்திற்குள் விரைவான ஒப்புதல்களை பெறுவார்கள். இது, மின்னூர்தி உரிமையை விரைவாகவும் தொந்தரவு இல்லாமல் பெறுவதை உறுதி செய்கிறது.
செலான் வங்கியின் லீசிங் தீர்வுகள் வாடிக்கையாளர் வசதியை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. 10% (A.I.R) இல் தொடங்கும் வட்டி வீதங்களுடன் வீட்டிற்கே வருகை தந்து உதவி மற்றும் இலவச ஆலோசனை சேவைகளை வழங்கும் அர்ப்பணிப்புமிக்க லீசிங் நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் கூடிய லீசிங் செயன்முறை ஊடாக வாடிக்கையாளர்கள் மேலும் பயனடைகிறார்கள். நாடளாவிய கிளை வலையமைப்புடன் செலான் வங்கி, ஆவணப்படுத்தல் முதல் ஒப்புதலுக்கு பின்னரான சேவைகள் வரை முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.
இந்த இணைவு குறித்து செலான் வங்கியின் தனிநபர் வங்கிப் பிரிவின் துணைப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில், “Browns EV உடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நிலைபேறான பிரயாணத் தீர்வுகளை இலகுவாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதுடன் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அதிகமான இலங்கையர்கள் பசுமைப் போக்குவரத்தின் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள எங்கள் விரைவான ஒப்புதல்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட லீசிங் தெரிவுகள் உதவும் என நம்புகிறோம்.” என்றார்.
Browns EV லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிவேன் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் விரைவான லீசிங் தீர்வுகளை வழங்க செலான் வங்கியுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பு மின்னூர்தி உரிமையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதுடன் பசுமையான இலங்கையை நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்தும்.” என்றார்.
செலான் வங்கிக்கும் Browns EVக்கும் இடையிலான இந்த இணைவு, எதிர்கால போக்குவரத்து துறையை வடிவமைப்பதில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது Browns EVயின் மின்னூர்திகளை ஆராய்ந்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் திட்டங்களைப் பெறலாம்.
மேலதிக விவரங்களுக்கு, செலான் வங்கியின் விசேட தொலைபேசி இலக்கமான 011-200 88 88ஐ தொடர்பு கொள்ளவும்.

Been looking for the safest place to grab the latest 188bet app. Found 188betappdownload. Has anybody used this site before? Tell me your experiences or go check them out at 188betappdownload.