A high-level fireside panel featuring Jeff Hoffman, Jeevan Gnanam, Yuen Wong, and the Deputy Minister of Tourism of Sri Lanka, moderated by Cherrie Chan, explored how travel innovation, entrepreneurship, and digital / AI infrastructure can help Sri Lanka compete more effectively on the global stage. Held under the theme “The Sri Lanka Destination Stack –…
ஜனசக்தி பைனான்ஸ் ‘இலங்கையின் முச்சக்கர வண்டி சமூகத்தை மேம்படுத்தல்’ பிரச்சார நடவடிக்கைக்காக வெண்கல Effie விருதை வென்றது
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தனது “Uplifting the Sri Lankan Three-Wheel Community” எனும் தாக்கம் மிக்க பிரச்சார நடவடிக்கைக்காக Effie Awards Sri Lanka 2025 விருதுகளில் நிதிப் பிரிவில் வெண்கல Effie விருதை வென்றுள்ளது.
இந்த அங்கீகாரம், படைப்பாற்றலைக் கொண்டு அளவிடக்கூடிய வணிக விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கான நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் அதேவேளை பின்தங்கிய சமூகங்களின் நிதிசார் உள்ளீர்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
Sri Lanka Institute of Marketing இனால் ஏற்பாடு செய்யப்படும் Effie விருதுகள், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் துறையில் மதிப்புமிக்க விருதுகளாகக் கருதப்படுகின்றன. இவ் விருதுகள் நிரூபிக்கப்பட்ட செயல்திறன், வலுவான மூலோபாய சிந்தனை மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களுக்கு வழங்கப்படுகின்றன.
விருது பெற்ற இப் பிரச்சார நடவடிக்கை, இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டதாகும். இவர்கள் நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு முக்கிய பங்காற்றி வந்த போதும், பெரும்பாலும் போதுமான அங்கீகாரம் கிடைக்காத சமூகமாகவே காணப்படுகின்றனர். இச் சமூகத்தில் பலர் தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்கான முதன்மை வாழ்வாதாரமாக முச்சக்கர வண்டிகளையே நம்பி இருப்பதோடு இவர்கள் நாட்டின் முறைசாரா பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
இப் பிரச்சார நடவடிக்கை, டிஜிட்டல், பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் களத்தில் நேரடி சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டதோடு முச்சக்கர வண்டி சமூகத்துடன் ஜனசக்தி பைனான்ஸ் நேரடியாக தொடர்புகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது. முச்சக்கர வண்டி சாரதிகள் சமூகத்திற்கு வழங்கும் முக்கிய பங்களிப்பை நிறுவனம் பாராட்டியதோடு அவர்களின் வருமானத்தை மேம்படுத்தவும் நீண்டகால வாழ்வாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவிடும் அணுகத்தக்க நிதித்தீர்வுகளையும் அறிமுகப்படுத்தியது. இம் முயற்சி, சாரதிகளுக்கு பொறுப்புள்ள நிதித்தீர்வுகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்கியதுடன் தங்கள் வாகனங்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவியதன் ஊடாக அவர்களின் தொழிலை நிலைத்தன்மையுடன் முன்னெடுக்கவும் ஆதரவளித்தது.
இச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், ‘Uplifting the Sri Lankan Three-Wheel Community’ பிரச்சார நடவடிக்கைக்காக வெண்கல Effie விருதை வென்றதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இது இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அன்றாட தொழில்முனைவோரை ஆதரிப்பதுடன் அவரகளது வாழ்வாதாரத்தையும் பொருளாதார உறுதிப்பாட்டையும் வலுப்படுத்த உதவும் பொறுப்பான நிதித்தீர்வுகளை வழங்கும் எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கிறது அத்துடன் இவ் விருது, சமூக முன்னேற்றத்தையும் வணிகத் தாக்கத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கமுள்ள முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க எங்களை மேலும் ஊக்குவிக்கின்றது.” என்றார்.
முச்சக்கர வண்டி சாரதிகளின் கனவுகள், சவால்கள் மற்றும் சமூகத்திற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்புகளை முன்னிறுத்திய இப் பிரச்சாரம், ஜனசக்தி பைனான்ஸை வெறும் நிதிச்சேவை வழங்குநராக மட்டுமன்றி, நாளாந்த வாழ்வாதாரங்களைப் புரிந்து, ஒத்துழைப்பு வழங்கும் நம்பகமான பங்காளராகவும் அதனை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த அங்கீகாரம், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் சிறப்பு மற்றும் நோக்கம் சார்ந்த பிரச்சாரங்களை உருவாக்குவதற்கான அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ளீர்ப்பான நிதிச்சேவைகளுடன் நிலைத்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ்வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.
