இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
தேர்தலை முன்னிட்டு மே 5, 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்தும் 04.05.2025ஆம் திகதி தொடர்புடைய கிராம சேவக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை வழங்குவதற்கு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.