பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
நாட்டின் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ,
“இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்.”
இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும். இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவௌிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.
முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். “நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றார்.