Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
“பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு” பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும், பஜாஜ் தயாரிப்புக்களுக்கான இலங்கையின் ஏக விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்திடம் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்திய பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த மிகப்பெரிய பரிசுப்போட்டியில் இறுதிச் சீட்டுழுப்பில் வெற்றியாளருக்குப் புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி பரிசளிக்கப்பட்டதுடன், மொரட்டுவை கட்டுக்குறுந்த பிரதேசத்தில் வசிக்கும் திரு.லக்மல் பிரசந்த பெர்னாந்து இந்தப் பரிசை வெற்றிகொண்டார். இரண்டாவது பரிசான புத்தம் புதிய பஜாஜ் பல்சர் N160 பிரீமியம் மோட்டார் சைக்கிளை அல்பிட்டிய கட்டந்தொல பகுதியில் வசிக்கும் திரு.ஆர்.கே.அஜித் குமார அவர்களினால் வெற்றிகொள்ளப்பட்டது.
மேலும் 05 வெற்றியாளர்களுக்கு ரூ.50,000 பணப்பரிசும், 10 வெற்றியாளர்களுக்கு ரூ.25,0000 பெறுமதியான டயர்களுக்கான கூப்பன்களும் வழங்கப்படும்.
இறுதியாக மேலும் 15 வெற்றியாளர்களுக்கு பேர்ள் பே (Pearl Bay) குடும்பப் பகேஜ் வழங்கப்பட்டதுடன், இது தவிரவும், பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு ஊக்குவிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 09 வார காலத்திலும் வாராந்தம் சீட்டிழுப்பு இடம்பெற்றதுடன், வாராந்தம் 25 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 பெறுமதியான அசல் உதிரிப்பாகக் கூப்பன்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்தபோது அதன் பொதியில் காணப்படும் யானைக் குட்டிச் சின்னத்துடன் கூடிய ஹொலோகிராம் ஸ்டிக்கரை சுரண்டும்போது தென்படும் OR குறியீட்டை ஸ்கான் செய்து குறித்த உதிரிப்பாகம் அசலானதா என்பதை உறுதிசெய்துகொண்டு, அதன் பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களை வழங்கி அல்லது ஹெலோகிராம் ஸ்டிக்கரை சுரண்டும் போது தென்படும் 0777 665577 என்ற இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி பஜாஜ் வாடிக்கையாளர்கள் இந்தப் போட்டியில் இணைந்துகொண்டனர்.
வரலாற்றின் மிகப்பெரிய பரிசுத் தொகுதியுடன் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தினால் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ பரிசுப் போட்டியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0114700600 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனத்தை தொடர்புகொள்ளவும். அல்லது www.dpmco.com என்ற இணையத்தளம் மற்றும் DPMC என்ற முகப்புத்தகம் ஊடாகப் பெற்றுக்கொள்ளவும்.
I was suggested this web site by way of my cousin.
I’m no longer sure whether or not this submit is written via
him as nobody else understand such targeted about my difficulty.
You’re incredible! Thank you!