இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
பேக்கரி ஊழியரின் மர்ம மரணம்! ஆரம்பமாகும் விசாரணை
களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவர் அங்குகுள்ள படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மத்துகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய களுத்துறை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்