போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 970 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 963 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 344 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 471 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  78  கிலோ  496 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 8033 கஞ்சா செடிகளும், 023 கிராம் குஷ் போதைப்பொருளும்,  39 கிராம் 863 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 863 போதை மாத்திரைகளும், 171  கிராம் 580 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 01 கிலோ 876 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன

கைதுசெய்யப்பட்டவர்களில் 26 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

2 thoughts on “போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 970 பேர் கைது!

  1. Đội ngũ hỗ trợ khách hàng của 66b chính thức hoạt động 24/7 thông qua nhiều kênh liên lạc như live chat, email, và hotline. Điểm nổi bật là thời gian phản hồi trung bình chỉ 30 giây cho live chat và 2 giờ cho email – thuộc top đầu trong ngành. TONY12-30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *