தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு
அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை (12) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு பிணைக் வைப்புத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்களுக்கு அமைவான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செலுத்தப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
55bmwlogin, sounds legit! Easy login? That will save me some time. Hope i have to login multiple times because of winning often. 55bmwlogin