ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – பிமல் ரத்நாயக்க
மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும். எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அது தேர்தலை பிற்போடும் செயற்பாடாக அமையாது. சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவது ஜனநாயகமிக்கதாக அமையும் என அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பழைய தேர்தல் முறைமையை இரத்துச் செய்து, புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியது. புதிய தேர்தல் முறைமை கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கலப்புத் தேர்தல் முறைமை 50 சதவீதம் தொகுதி அடிப்படையிலும், 50 சதவீதம் மேலதிக பட்டியல் அடிப்படையிலும் காணப்பட்டது.எவ்வாறு இருப்பினும் நாட்டில் தற்போது மாகாண சபைத் தேர்தல் முறைமை ஒன்று உள்ளது.
