கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பம் – ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, மனைவிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் நேரடியாக வருகைதந்த மேல்மாகாண கல்வித்துறை அதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்தபொழுது, மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அதனை அடுத்து வருகை தந்த அதிகாரி “சட்டத்தின் முறையில் தான் நாம் இதனை கையாளவேண்டும். நாளைய தினத்திற்குள் குறித்த ஆசிரியர் வேலை நீக்கம் செய்யப்படுவார்” என்று கூறினார்.
இந்நிலையில், குறித்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


