இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
மீண்டும் விசாரணைக்கு வரும் முன்னாள் அமைச்சரின் வழக்கு
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஒரு கடுமையான கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்காக திரும்பப் பெற கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் யோகன் அபேவிக்ரம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

