Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
அடுத்த வருடத்திற்கான பாடசாலை பரீட்சைகளின் திகதிகள் குறித்த அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த ஆண்டு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என்றும், க.பொ.த உயர் தரப் பரீட்சை 2026 ஒகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 2027 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றும் மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சையானது 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் நடத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.