Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
அந்த இடத்தில் விகாரை எதுவும் இருக்கவில்லை உணவகம் தான் இருந்தது-ஜனாதிபதி
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, திருகோணமலை சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து அறிக்கை கோருவதாகக் கூறினார் .
பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. சில குழுக்கள் ஏன் இன்னும் குழப்பத்தை உருவாக்குகின்றன? அவர்கள் அனுமன் தீ வைப்பது போல தீ வைக்கிறார்கள். இனவெறிக்கு முற்றிலும் இடமில்லை. அந்த விளையாட்டுகள் முடிந்துவிட்டன.” அனைத்து நாட்டுமக்களும் இனவாத தூண்டுதலை நிராகரித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இன பதட்டங்களை மீண்டும் உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக் இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் தனது உரையில் தெரிவித்தார்.
இதன்போது இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது, மேலும் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அக்கடமியை நிறுவுவதற்கு ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளது.2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TF-57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
கூடுதலாக, அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு இரண்டு C-130 விமானங்களை அன்பளிப்பாக வழங்கும்.
அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே KA-360 மற்றும் KA-350 பீச் கிராஃப்ட் விமானங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்