நாளைய (01) சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள்…
அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக இருந்த வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.