இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர்.
அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாந்தோட்டை, மாமாடல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.