ஆகஸ்டில் பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் – எம்.பி அர்ச்சுனா

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் காட்டம்.

பாராளுமன்றத்தில் இன்று (மார்ச் 08) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை போது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைபுதான் பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார் எனவும் இசைப்பிரியா படுகொலை, பாலச்சந்திரன் படுகொலை மற்றும் கிருசாந்தி படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழ் மண் நம்பாது ஏனெனில் இவை வெறும் அரசியல் வாக்குறுதிகள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம் எனவும் அர்ச்சுனா தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையின் போது சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் எமது தேசிய தலைவரை நினைவுப்படுத்தினார்கள் என்பதனையும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் பெண்களுக்கான அங்கீகாரம், பாதுகாப்பு தொடர்பில் கடந்தகாலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மேற்கோள்கட்டியதோடு பல்வேறு துறைசார்ந்த பெண் ஊழியர்களின் நிலை மற்றும் சம்பளம் பற்றியும் சபையில் கேள்வியெழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *