இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
ஆளுநர்களும்… ஆசிரியர்களும்…!

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (வெப்ரவரி 13) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக இடம்பெறாத இடமாற்றங்கள், இடமாற்றங்களில் உள்ள அரசியல் தலையீடு, நடைபெறும் இடமாற்றங்கள் பற்றிய விபரங்களை ஒழுங்குமுறையாக அறியத்தருதல், பாடசாலைகளில் உள்ள மலசலகூடங்களின் நிலை, அதனை துப்பரவு செய்வதில் உள்ள சிக்கல்கள், அதற்கான மாற்றுவழிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளின் காலதாமதம், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள், தாம் வழங்கும் கடிதங்களுக்கான ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும், பாடசாலைகளில் நடத்தப்படும் ஆடம்பர நிகழ்ச்சிகளை குறைத்தல், அதற்காக பெற்றோரிடம் வசூலிக்கப்படும் பணத்தை தவிர்த்தல் போன்ற விடயங்கள் ஆசிரியர் சேவை சங்கத்தினரால் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் 3,500கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர இன்று (வெப்ரவரி 13) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் ஆளுநர் மக்களை சந்தித்த போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மனு ஒன்றை கையளித்தனர். அச்சந்தர்பத்திலேயே ஆளுநர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர்கள் எனவும் தற்பொழுது நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
ஏனையவர்களுக்கான அனுமதி கிடைத்த பின்னர் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடத்தப்பட்டு வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.