நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.





மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

