டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார்.
இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

