நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார் பிரான்ஸ் கூட்டுப் படைத் தளபதி
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவைச் சந்தித்துள்ளார்.
இருவருக்கிடையிலான சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கலாக இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.




