உள்ளூராட்சி தேர்தலுக்கு வழங்கவேண்டிய விடுமுறை விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை காலம் வழக்கம் போல் தீர்மானிக்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

இதன்படி, 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 முதல் 150 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் 1,1/2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு அதிகமாக இருப்பின் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

வாக்களிப்பது ஒரு நாட்டு பிரைஜையின் உரிமையுடன் கூடிய கடமையாகும். குறிப்பாக ஏனைய தேர்தல்களோடு ஒப்பிடும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்குவீகிதம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் மக்கள் அதிக கவனமாக வாக்களிக்கவேண்டிய தேர்தலே இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலே.
காரணம் மக்கள் அடிப்படை மற்றும் அவர்கள் வாழும் சூழலை சிறப்பாக வைத்திருக்க நாடவேண்டிய முதல் இடம் உள்ளூராட்சிசபைதான்.

உரிமைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்ட தட்டிக்கேற்பதற்கு முதலில் வாக்களிக்கவேண்டும்.

எம் வாக்கு எமது உரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *