இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலதிக தகவல்கள்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான கணேமுல்ல சஞ்சீவ இன்று (வெப்ரவரி 19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சந்தேக நபர் குற்றவியல் நடைமுறைச் சட்டடிப்புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்துவைப்பதற்கு ஏற்றவாறு பக்கங்களை வெட்டி நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் உலவருகின்றன.