கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு – விவசாய நிலங்கள் பாதிப்பு

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான்கதவுகளும் நேற்று (ஏப்ரல் 28) இரவு திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி நான்கு வான் கதவுகள் ஓடு அடிக்கும், ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 114,000 கன அடியாக இருக்க நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்து கந்தளாய் குளம் நிரம்பியதை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது வினாடிக்கு 1400 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாக கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னியனார்மடு, புளியடிக்குடா முத்தான பிரதேசங்களில் வயல் நிலங்களில் நீர் புகுந்து பயிர்ச்செய்கை நீரில் மூழ்கியுள்ளது.

இப்பிரதேசங்களில் சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பெரும்போக வேளாண்மை செய்யப்படுவதால் தற்போழுது அவற்றில் நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவணம் செலுத்தவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *