டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
கம்போடிய தூதுவர் – பிரதமர் சந்திப்பு!

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார்.
தூதுவர் ராத் மானியை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை தூதுவர் ராத் முன்மொழிந்தார். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விளக்கினார்.
கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இலங்கையை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தக் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளியுறவு அமைச்சின் இருதரப்பு அரசியல் விவகாரங்கள் (கிழக்கு) மேலதிக செயலாளர் எஸ்.எஸ். பிரேமவர்தன, அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஆர். கீகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.