இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம்.
கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.


கலையுலகத்திற்கு பேரிழப்பு . அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.