டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் ராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் இஸ்ரேல் ராணுவம காசா மீது அதிபயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. காசாவின் ராபா பகுதியை நோக்கி குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் உள்பட அப்பகுதி கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.