First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…
கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை- காரணம் வௌியானது
கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது சடலம் அருகில் உள்ள கால்வாயில் கொண்டுச்சென்று வீசப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
65 வயதான குறித்த பெண், ஆணொருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று அந்நபருடன் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

