உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
கூடிய விரைவில் குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத் தொடங்கியிருப்பதுடன், இதனால் அரசாங்க வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் துறை ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்ததுடன் முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மதுபானங்களை தடை செய்து, மக்களை மீண்டும் சட்டப்பூர்வமான மதுபான பயன்பாட்டுக்கு திருப்பி, அரசுக்கு வருவாய் அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
தற்போது வருவாய் உயர்ந்துள்ளது, இதற்க்கு வரிவிதிப்பு அதிகரிப்பல்ல காரணம், சட்டவிரோத வியாபாரத்தை கண்காணித்து சட்டப்பூர்வ வியாபாரமாக மாற்றியதே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறைந்த விலையிலான புதிய மதுபான வகை அறிமுகப்படுத்தப்பட்டால், அதன்மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ. 50 பில்லியன் வருவாய் கிடைக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து, நிதி அமைச்சருக்கான ஒரு பரிந்துரை சமர்ப்பிக்க உள்ளோம் எனவும் உதய குமார கூறினார்.