உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அத்தோடு காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது வாகன தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ,பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்திய வாகன சாரதிகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
மேலும், பௌர்ணமி மற்றும் விசேட விடுமுறை நாட்களில் பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.