கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
சிங்கராஜ வனப்பகுதியில் காட்டுத்தீ.
நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹட்டன் சிங்கராஜ வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் ஹட்டன் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு குடிநீர் வழங்கும் சிங்கராஜ நீர்த்தேக்கத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஒரு தனிநபர் அல்லது குழுவால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.