உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
சிவனொளிபாத மலைப்பகுதியில் தீ பரவல்.

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் சுமார் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீ அதிக வெப்பமனா காலநிலையினால் சிவனொளிபாதமலை தொடர் வரை பரவியது.
எனினும் பெரும் பூரேற்றத்துக்கு மத்தியில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் உதவியுடன் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் தொடர்ந்து கடும் வெப்பமான காலநிலை காணப்படுவதனால் இனம் தெரியாதோரால் தீ வைக்கும் விசம செயல் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு தீ வைப்போர் தொடர்பில் தெரியவரும் நிலையில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத் தருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.