நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

