இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார்.
பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில்,
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படாது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.
பரீட்சைக்கு தோற்ற ஆயத்தமாக உள்ள மாணவர்கள் 11 வயதுக்கும் குறைந்தவர்களாக காணப்பட வேண்டும்.
மேதிக தகவல்களுக்கும் விண்ணப்ப வழிமுறைகளுக்கும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியை பிரவேசியுங்கள்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளும் குறித்த இணையத்தள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் – 011-2784537, 011-2786616, 011-2784208 011-2786200, 011-2784201
மின்னஞ்சல் முகவரி – http://gr5schexam@gmail.com
அவசர எண் – 1911
தொலைநகல் எண் – 011-2784422