டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை!

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்பின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால், இணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை?
இருப்பினும், இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தில் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.