நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

