நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்
காலை 11 மணி வரை நிலைவரப்படி,
வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

