துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17…
நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.