இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
நுவரெலியாவில் பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக நுவரெலியாவிலிருந்து விசேட பேருந்து சேவையை இயக்கப்படுகின்ற போதிலும் நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் போக்குவரத்து சேவைகள் சீராக இல்லாத காரணத்தினால் சரதிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.
நுவரெலியாவில் இருந்து குறுகிய தூர பேருந்து போதிய அளவில் இல்லாமையால் பேருந்து தரிப்பிடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது இதனால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேரிட்டிருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.