இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பயிர்கள் தொடர்பான தகவல்களை பெற புதிய குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகம்

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் இந்த தகவல்களை பெறலாம் .
இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நெல் பயிருக்கு எண் 01 உம், மிளகாய் பயிருக்கு எண் 02 உம் , சோளப் பயிருக்கு எண் 03 உம், பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம் , உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம் , புடலங்காய் பயிருக்கு எண் 06 உம் ,கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம் இட முடியும் என்பதுடன் தக்காளி பயிருக்கு எண் 08 உம், பப்பாளி பயிருக்கு எண் 09 உம், வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.