Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
பாலங்களின் நிர்மாண பணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அப்போது வேலைகள் ஆரம்பிக்கப்படாத 184 பாலங்களை நிர்மாணிப்பதற்கு 2022 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 142 பாலங்களில் 45 பாலங்களின் வேலைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
