இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் வாய்ந்த நிலநடுக்கம் – 6.1 ரிக்டர்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று(ஜூன் 28) 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தபோதிலும் சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.