டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான அஞ்சலியை செலுத்தியதோடு, உண்மைக்கு குரல் கொடுத்து பல்வேறு காரணங்களால் மரணித்த ஊடகவியலாளர்களையும் நினைவுபடுத்தி அவர்களின் ஆத்ம சந்திக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


பின்னர் பூர்வாங்க நிகழ்வான ஒன்றியத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டதோடு, செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக ஜூனியர் தமிழன் பத்திரிகையில் கடைமையாற்றும் திருமதி.வருணியும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக சுயாதீன ஊடகவியலாளர்களான தில்லையம்பலம் தரணீதரன் மற்றும் கலாவர்சினி கனகரட்ணம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக சுயாதீன ஊடகவியலாளரான மஹேஸ்வரி விஜயனந்தன் மற்றும் டான் செய்திப்பிரிவின் பொறுப்பதிகாரியான நிர்ஷன் இராமானுஜமும்,உதவிப் பொருளாளராக சுயாதீன ஊடகவியலாளர் பார்த்தீபனும், நிர்வாக செயலாளராக திரு.ஈஸ்வரலிங்கமும், துணை நிர்வாக செயலாளராக எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத்தும் தெரிவு செய்யப்பட்டதோடு ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க ஊடகத்துறையில் பலவருட அனுபவங்களை கொண்டுள்ள ஒரு உயர்பீடம் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பெரும்பாலான இளம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டது தனிச்சிறப்பு.
இதன்போது பல்வேறு ஆரோக்கியமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


