இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் பாதுகாப்பாக இருங்கள் – வைத்தியர் சமில் விஜேசிங்க

சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தீவிபத்து, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகுகின்றமை, நீராடச்சென்று நீரில் மூழ்குகின்றமை போன்ற அனர்த்தங்கள் பதிவாகின்றன.
எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.