நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானம் இன்று எட்டப்படும்.
பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (வெப்ரவரி 18) எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள் பேக்கரி பொருட்கள் செய்யும் மாவின் விலையை 10ரூபாயால் குறைத்ததன் பின் இந்த தீர்மானத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன கூறினார்.

