சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்க்கு வந்த 14 பேர் கைது!
சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.