டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்பட்டு
சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும் இதற்கான அரசியலமைப்பு பேரவைக்கு நியமன பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (மார்ச் 08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.