டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
மாத்தளை பகுதியில் T56 ரக துப்பாக்கி ஒன்று மீட்பு

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுது கங்கை வனப்பகுதியில் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, நேற்று (29) மாலை இந்த துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த இடத்தில் T-56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இணைந்ததாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.