நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்
தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

