Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
வடக்கில் பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில், ஹட்ச் செயற்படுத்திய “GRIT Accelerator” இன் முதல் குழுவிற்கான நிகழ்வு நிறைவு
இலங்கையின் வட மாகாணத்தில் பெண் தலைமையிலான ஏழு வணிக தொடக்கங்களின் (startups) முதலாவது குழுவின் நிறைவு நிகழ்வினை, இலங்கையின் முன்னணி புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான Hatch Innovation அண்மையில் முன்னெடுத்திருந்தது. 2025 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள HatchWorks இல் முன்னெடுத்த இந்நிழ்வானது, “Demo Day” உடன் இடம்பெற்றது. இதில் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை முதலீட்டாளர்கள், சந்தை இணைப்பு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடம் வெளிப்படுத்தினர்.
வட மாகாணத்தில் நிலைபேறான, பால்நிலை ரீதியில் பதிலளிக்கக்கூடிய தொழில் முனைவோர் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். வளர்ச்சி, ஈடுகொடுத்தல், முதலீடு, பயிற்சி (Growth, Resilience, Investment, and Training – GRIT) என அறியப்படும் இந்தத் திட்டமானது, Global Affairs Canada (GAC) மற்றும் World University Service of Canada (WUSC) ஆகியவற்றுக்கு இடையேயான 6 வருட கூட்டுத் திட்டமாகும் (2022-2027). இது பெண் தொழில்முனைவோர் ஈடுகொடுத்தல், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வலுவூட்டலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த வணிக தொடக்கங்களின் நிறுவுனர்கள் குழுவானது, GRIT Demo Day (வணிக தொடக்கத்தை வெளிப்படுத்தும்) நிகழ்வில் முதலீட்டாளர்கள், வணிகப் பங்காளர்கள், வசதியளிப்பாளார்களிடம் தமது வணிக யோசனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக பயன்படுத்திக் கொண்டனர். இது இலங்கையின் வடக்கில் எதிர்கொள்ளப்படும் முக்கியமான சந்தைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான, பெண் தலைமையிலான நிறுவனங்களின் உண்மையான சாத்தியக்கூறுகள் மற்றும் தாக்கத்தை எடுத்துக் காட்டியது. வணிகத் திறன், வெளிப்படுகை, சந்தை அணுகல், சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம், அபிவிருத்தியடைந்து வரும் பிராந்தியங்களில் உள்ள பெண்களுக்கு, தொழில்முனைவை அணுகக் கூடியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அளவிடக்கூடியதாகவும் மாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இந்தத் தளம் மூலம் Hatch தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.
GRIT இன் நோக்கம் குறித்து கருத்து வெளியிட்ட, Hatch புத்தாக்கங்கள் தொடர்பான பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), மெவான் பீரிஸ், “உண்மையான சமூகத் தேவைகளுக்குள், புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் திறமையான மற்றும் உறுதியான பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதன் மூலம், மிகத் தேவையான வேளைகளில் வாய்ப்பை உருவாக்குவதை GRIT நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொழில்முனைவோரின் தன்னம்பிக்கை, திறன் மற்றும் இணைப்புகளை மேம்படுத்துவது எமது இலக்காகும். இதன் மூலம் அவர்கள் நிலைபேறான முறையில் மேம்படவும், வட பிராந்தியத்தின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் முடியும். அதிக ஆற்றல் வாய்ந்த, புத்தாக்கமான வணிக தொடக்கங்களுக்கு தொடர்ச்சியாக உதவவும், இலங்கையின் புத்தாக்க களத்தில் அதிக பெண்களை முன்னிலைப்படுத்தவும் Hatch தொடர்ந்தும் உறுதியாக உள்ளது.” என்றார்.
இது குறித்து, சிரேஷ்ட திட்ட முகாமையாளர் ருவனரா திலகரத்ன குறிப்பிடுகையில், “சரியான வளங்கள், தொடர்பு வலையமைப்புகள் மற்றும் வழிகாட்டல்கள் ஆகியன பெண்களுக்கு வழங்கப்படும்போது எவ்வாறான பலனை பெறலாம் என்பதை இந்த முதல் குழுவின் வெற்றி காண்பிக்கிறது. GRIT ஆனது வணிகங்களுக்கு மட்டுமல்லாது, நீண்ட கால ஈடுகொடுத்தலுக்கும் பிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கும் ஊக்கமளிக்கிறது.” என்றார்.
நடைமுறைத் திறன்களை மேம்படுத்துதல், தனிப்பட்ட ரீதியான வழிகாட்டல், முதலீட்டிற்கு தயார் நிலை மற்றும் மூலோபாய வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகியன தொடர்பான இத்திட்டத்தின் முன்னுரிமையானது, பல்வேறு துறைகளைக் கொண்ட GRIT ன் வணிக தொடக்க குழுவினர் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.
Vonderly வணிக தொடக்கத்தின் நிறுவுனர் கிருஷாந்தி ஷோபிதன், இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்தான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கையில், இந்த ஊக்கித் திட்டமானது,இந்தத் திட்டமானது எனது
கம்பனியின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் அடையக்கூடிய இலக்குகள் சம்பந்தமான மதிப்பீட்டுடன் ஆரம்பமாகி நிதி, மனித வளம், விற்பனை மற்றும் வர்த்தகநாமம் தொடர்பில் துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தனிப்பட்ட சந்திப்புகள், விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் தொழில்முறை வழிகாட்டல் மூலம் எனது நிறுவனத்திற்குத் தேவையானவற்றை நான் கற்றுக்கொண்டேன். இக்குழுவினரின் சிறந்த புரிதல் மற்றும் ஆதரவின் காரணமாக, இந்தப் பயணம் உண்மையாகவே பயனுள்ளதாக அமைந்திருந்தது. இங்கு பெற்ற மிகச் சிறந்த அனுபவம் தொடர்பில் எமது பங்காளர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்களாக உள்ளோம்.” என்றார்.
இலங்கையின் தொழில்முனைவோர் கட்டமைப்பை வலுப்படுத்துவது எனும் பொதுவான இலக்குடனான இந்நிகழ்வில், அபிவிருத்தித் துறை நிபுணர்கள், முதலீட்டாளர்கள், முன்னணி பெருநிறுவன சமூகப் பொறுப்பாளர்கள் (CSR), வணிக தொடக்கங்களின் வளப்படுத்துனர் வலையமைப்புகள், வணிக அடைகாப்போர், தூண்டுவோர், அரசாங்க பங்குதாரர்கள் மற்றும் ஊடகப் பங்காளிகள் ஆகியோர் ஒன்றிணைத்திருந்தனர்.
உரிய ஆதரவுடன் பெண் தலைமையிலான வணிக தொடக்கங்கள், பாரிய வெற்றியை அடைய முடியும் என்பதை நிரூபிப்பதன் மூலம், அடுத்தடுத்த திட்ட வாய்ப்புகளில் வட மாகாணத்திலுள்ள ஆர்வமுள்ள பெண் தொழில் முனைவோரை பங்கேற்க தூண்டும் என GRIT Demo Day எதிர்பார்க்கிறது. நிதி வாய்ப்புகள், உலகளாவிய வெளிப்பாடு, வழிகாட்டல், வணிக அடைகாத்தல், தூண்டிகளை தேடும் புத்தாக்கமானோர் அணுகும் இடமாக Hatch செயற்படுகின்றது.
Hatch திட்டங்கள் மற்றும் எதிர்கால GRIT குழுக்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: https://hatch.lk/program/
Bet09app, huh? Okay, tried this one out for size. Mobile app is actually pretty solid, runs smoothly on my ancient phone. They have some decent promos too. Could be a good backup option. Give it a shot: bet09app