பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து.

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முற்பட்டபோது, முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.